சூர்யாவும் ஜோதிகாவும் டீத்து£ள் விளம்பரத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்கள். ஒளவையார் தந்த நெல்லிக்கனியை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டது போல, அப்படியே இருப்பதுதான் ஜோதிகாவின் சிறப்பு. இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் அத்தனை பேரும் மீண்டும் நீங்கள் இருவரும் இணைந்து நடிக்கலாமே என்று ஆர்வத்தை தெரிவிக்க, அதுக்கென்ன... செஞ்சிட்டா போச்சு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சூர்யா.
இந்த அரும்பெரும் ரீ என்ட்ரியை அலுங்காமல் குலுங்காமல் அடுத்தவர்களுக்கு கொடுக்க, இவர்கள் என்ன சினிமா தெரியாதவர்களா? தனது சொந்தக்காரர் கம்பெனியிலேயே படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இன்னும் சில மாதங்கள் கழித்து இந்த படத்தின் விளம்பரங்கள் ஞானவேல் ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ பெயரில் வெளிவரலாம். ரசிகர்களே... கைதட்டவும் விசிலடிக்கவும் தயாரா?
Tags : Jothika
Aucun commentaire:
Enregistrer un commentaire