சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்த சூர்யா-ஜோதிகா நட்சத்திர ஜோடி,தற்போது கமெர்சியல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளது.
கோலிவுட் படத்தில் தனது காதல் மனைவி ஜோதிகா,இரண்டு குழந்தைகளுக்கு மம்மியான பிறகு ,கணவர் சூர்யா நடிக்க அனுமதிப்பாரா? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் திரையுலகில் கிளம்பியது.
'ஜோ' என்னை விட நன்றாக நடிக்கிறாங்க, திருமணமான பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு கேமிரா முன் நின்றுள்ளார். நானும் ஜோவும் போட்டி போட்டு நடித்தோம்.
இப்போது நடிப்பதற்காக பதினாறு கிலோ எடையை குறைச்சு, இன்னும் இளமையான 'ஜோ'வாகவே வந்திருக்காங்க. நடிப்பின் மேல் வைத்திருக்கும் உணர்வுப்பூர்வமான காதல் மட்டும் 'ஜோ'வுக்கு குறையவில்லை.
திருமணத்துக்கு முன் இருந்த 'ஜோ'வுக்கும், இப்போது விளம்பர ரீலில் பார்த்த 'ஜோ'வுக்கும் அதிக வித்தியாசமில்லாதை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய திரையில் 'ஜோ' நடிக்க அனுமதிப்பீங்களா? என்று என்னிடம் கேட்கிறார்கள்.
படஉலகில் குறிப்பிடும்படியான 'ஸ்பெஷல் புராஜெக்ட்டில்' அவர் நடிப்பார்.ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தால் கண்டிப்பாக 'ஜோ' நடிப்பார்' என்று சூர்யா கூறியுள்ளாராம்.