mardi 29 mars 2011

டீத்து£ள் தந்த ரீ என்ட்ரி சூர்யா-ஜோதிகா புது முடிவு


சூர்யாவும் ஜோதிகாவும் டீத்து£ள் விளம்பரத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்கள். ஒளவையார் தந்த நெல்லிக்கனியை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டது போல, அப்படியே இருப்பதுதான் ஜோதிகாவின் Surya - Jyothikaசிறப்பு. இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் அத்தனை பேரும் மீண்டும் நீங்கள் இருவரும் இணைந்து நடிக்கலாமே என்று ஆர்வத்தை தெரிவிக்க, அதுக்கென்ன... செஞ்சிட்டா போச்சு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சூர்யா.
இந்த அரும்பெரும் ரீ என்ட்ரியை அலுங்காமல் குலுங்காமல் அடுத்தவர்களுக்கு கொடுக்க, இவர்கள் என்ன சினிமா தெரியாதவர்களா? தனது சொந்தக்காரர் கம்பெனியிலேயே படத்தை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இன்னும் சில மாதங்கள் கழித்து இந்த படத்தின் விளம்பரங்கள் ஞானவேல் ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ பெயரில் வெளிவரலாம். ரசிகர்களே... கைதட்டவும் விசிலடிக்கவும் தயாரா?

TagsJothika



samedi 12 mars 2011

ஜோதிகா சினிமாவில் நடிக்க சூர்யா பர்மிஷன்

சில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்த சூர்யா-ஜோதிகா நட்சத்திர ஜோடி,தற்போது கமெர்சியல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளது.

கோலிவுட் படத்தில் தனது காதல் மனைவி ஜோதிகா,இரண்டு குழந்தைகளுக்கு மம்மியான பிறகு ,கணவர் சூர்யா நடிக்க அனுமதிப்பாரா? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் திரையுலகில் கிளம்பியது.
'ஜோ' என்னை விட நன்றாக நடிக்கிறாங்க, திருமணமான பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு கேமிரா முன் நின்றுள்ளார். நானும் ஜோவும் போட்டி போட்டு நடித்தோம்.
இப்போது நடிப்பதற்காக பதினாறு கிலோ எடையை குறைச்சு, இன்னும் இளமையான 'ஜோ'வாகவே வந்திருக்காங்க. நடிப்பின் மேல் வைத்திருக்கும் உணர்வுப்பூர்வமான காதல் மட்டும் 'ஜோ'வுக்கு குறையவில்லை.
திருமணத்துக்கு முன் இருந்த 'ஜோ'வுக்கும், இப்போது விளம்பர ரீலில் பார்த்த 'ஜோ'வுக்கும் அதிக வித்தியாசமில்லாதை பார்த்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய திரையில் 'ஜோ' நடிக்க அனுமதிப்பீங்களா? என்று என்னிடம் கேட்கிறார்கள்.
படஉலகில் குறிப்பிடும்படியான 'ஸ்பெஷல் புராஜெக்ட்டில்' அவர் நடிப்பார்.ஸ்கிரிப்ட் பிடிச்சிருந்தால் கண்டிப்பாக 'ஜோ' நடிப்பார்' என்று சூர்யா கூறியுள்ளாராம்.